உலகம்

உயிர்வாழ சிறுநீரை மாறி மாறி குடித்த அம்மா- மகள்! 4 நாட்களாக லிப்டிற்குள் சிக்கி தவித்த துயரம்!

Summary:

Mother and daughter trapped in elevator drank urine to survive

சீனாவில் திடீரென பழுதடைந்த லிப்டிற்க்குள் சிக்கிய தாய் மற்றும் மகள் இருவரும் உயிர் வாழ்வதற்காக ஒருவருக்கொருவர் மாற்றி சிறுநீரை சேகரித்து குடித்த சம்பவம் வெளியாகி பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  

சீனாவில் நான்கு மாடி குடியிருப்பு ஒன்றில், 82 வயது தாய் மற்றும் 64 வயது மகள் இருவரும் மாடிக்கு செல்வதற்காக லிப்டில் சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென லிஃப்ட் பழுதாகி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் லிப்டுக்குள்ளே சிக்கி தவித்துள்ளனர். மேலும் தங்களிடம் போன் இல்லாததால் அவர்களால்  யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை. மேலும் இருவரும் உதவிகேட்டு சத்தம் போட்டும் எந்த பலனுமில்லை. 

இந்த நிலையில் லிப்டிற்குள் சிக்கிய அவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக, ஒருவருக்கொருவர் சிறுநீரை சேகரித்து குடித்துள்ளனர். பின்னர்  96 மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு ஜியான் நகரிலுள்ள கயாக்சின் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சைக்குப் பிறகு இருவரும் குணமடைந்த நிலையில்  இதுகுறித்து கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement