முதல் முறையாக மனிதர்களிடமிருந்து, நாய்க்கு பரவிய குரங்கு அம்மை.... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!Monkey measles spread from humans to dogs for the first time... World Health Organization warning...

முதல் முறையாக மனிதர்களிடம் இருந்து நாய்க்கு குரங்கு அம்மை பரவியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

ஜெனீவா, ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் இப்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உட்பட 92-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. உலக முழுவதிலும் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரபடுத்தி இருக்கின்றன. உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. முதல் முறையாக மனிதர்களிடம் இருந்து நாய்க்கு, குரங்கு அம்மை பரவியது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பாரிஸில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து அவரது செல்லப்பிராணி நாய்க்கு, குரங்கு அம்மை பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், இது மனிதர்களிடமிருந்து விலங்குக்கு பரவுவது இதுவே முதல் முறையாகும். எனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளிடமிருந்து தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.