உலகம் லைப் ஸ்டைல்

H2O விற்கு வெளிநாட்டு அழகி அளித்த விளக்கத்தால் சிரிப்பலையில் அதிர்ந்த அரங்கம்; வைரலாகும் வீடியோ..!!

Summary:

miss bankladesh 2018 vairal video

இவ்வுலகில் அழகும் அறிவும் ஒருங்கே அமையப் பெற்ற பெண்மணிகள் வெகு சிலரே. ஒருவரிடத்தில் அழகு இருந்தால் அறிவு இருக்காது; அறிவு இருந்தால் அழகு இருக்காது; இந்த வகையில் தற்போது ஒரு நகைச்சுவையான சம்பவம் பங்களாதேஷில் அரங்கேறியுள்ளது.

மிஸ் பங்களாதேஷ் அழகிப் போட்டி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலக அழகி போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த வகையில் பல சுற்றுக்களாக நடந்த போட்டியில் வெற்றிபெற்ற அழகிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். இந்த நிலையில் இப்போட்டியில் அழகிகளின் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒரு அழகிக்கு கேட்கப்பட்ட கேள்வியானது H2O என்றால் என்ன என்பது.

அந்த அழகி சற்று சந்தேகமாக ரெஸ்டாரண்டா என்று பதிலளித்தார். உடனே நடுவர்கள் உட்பட அங்கு இருந்த அனைவரின்  சிரிப்பலையில் அரங்கு அதிர்ந்தது. பிறகு சுதாரித்துக் கொண்ட அந்த அழகி டாக்காவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டுக்கு  H2O என்று தான் பெயர் என்று சமாளித்தார்.

அதனை தொடர்ந்து, நடுவர்களில் ஒருவர் H2O என்றால் தண்ணீர் என்று விளக்கம் அளித்தார். இந்த வீடியோ தற்சமயம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு 2000- ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் பங்கேற்ற பிரியங்கா சோப்ராவிடம் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களில் யார் மிகவும் வெற்றிகரமானவர் என்று கேட்கப்பட்ட போது அவர் அன்னை தெரசா என்றார். 

ஆனால் அன்னை தெரசா 1997ம் ஆண்டு இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த வகையில் அந்த வீடியோவும் தற்சமயம் வைரலாகி வருகிறது.
 


Advertisement