இரயில் முன் செல்பி எடுக்க முயற்சி; நொடியில் பெண் பரிதாப பலி.. செல்பி மோகம் உயிரைப்பறித்த சோகம்.!Mexico Stream Line Train Selfie Woman Died 

 

மெக்சிகோ நாட்டில் உள்ள ஹிடால்கோ, னோபாலா பகுதியில், கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு முதல் இயக்கப்பட்ட நீராவி இரயில் எஞ்சின், தனது பயணத்தை நிறைவு செய்வதால் உள்ளூர் மக்கள் அதனை பாராட்டி கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, தனது வழித்தடத்தில் இயக்கப்பட்ட நீராவி இரயிலை பலரும் ஆர்வத்துடன் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். 

செல்பி ஆசையால் நொடியில் பலி

பெண் ஒருவர் அச்சமயம் இரயில் தண்டவாளத்தின் முன்பு நின்றவாறு செல்பி எடுக்க முயற்சித்தார். அதிவேகத்தில் வந்த இரயில் எஞ்சினுக்கு அருகே பெண் நிற்க, அவரின் மீது இரயில் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்தவர் பெண் உயிரிழந்ததை கண்டு அதிர்ந்தபடி அலறியுள்ளார். 

இதையும் படிங்க: இந்தியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது - கனடா பகிரங்க குற்றசாட்டு.. கேள்விக்குறியாகும் இந்தியா - கனடா உறவுகள்.!

வீடியோ வைரல்

இந்த விஷயம் குறித்த பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. செல்பி ஆசை பெண்ணின் உயிரை பறித்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெண் நொடியில் உயிரிழந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.