அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"உலகம் எங்க போகுது... ஒரு அம்மா இப்படியெல்லாமா செய்வாங்க...?" சர்ச்சையை ஏற்படுத்திய பிறந்தநாள் கொண்டாட்டம்.!
வெச்சிக்கோ நாட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது 18 வயது மகனுக்கு தாய் செய்த காரியம் பலரிடமும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
மெக்சிகோ நாட்டில் தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. தனது மகன் மகனின் 18 வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய தாய் தனது மகன் 18 வயதை பூர்த்தி செய்து விட்டான் என்பதற்காக அவர் செய்திருக்கும் காரியம் நெட்டிசன்களை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது ..

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வெளி அறையில் தனியாக அமர்ந்திருக்கும் மகனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் 18 என்று எழுதப்பட்ட கேக்குடன் அவரது அறைக்கு செல்கிறார் தாய். பின்னர் அந்த சிறுவனை கண்களை மூடச் சொல்லி திறக்கச் சொல்லும்போது ஸ்ட்ரிப் டான்சர் அந்த சிறுவனின் முன் தோன்றி நடனமாடுகிறார்.
அந்த சிறுவன் வெட்கத்தில் தனது முகத்தை கைகளால் மூடுகிறான். பின்னர் அவனது தாய் சிரித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறுகிறார். அதன் பிறகு அந்த ஸ்ட்ரிப் டான்சர் சிறுவனின் மடியில் உட்கார்ந்து நடனம் ஆடுகிறார் . இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதோடு இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் மக்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.