கார் மீது கல்லை எறிந்த வாலிபர்! அடுத்த நொடியே அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வைரல் வீடியோ.

கார் மீது கல்லை எறிந்த வாலிபர்! அடுத்த நொடியே அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வைரல் வீடியோ.


Men threw a brick at a car it bounced and hit his face

அரசன் அன்றே கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் என்பது பழமொழி. ஆனால் ஒருசில நேரங்களில் நாம் செய்யும் தவறுக்கு உடனே தண்டனை கிடைத்துவிடுகிறது. அதுபோன்ற நிகழ்வுகளில் ஒன்றுதான் இது.

வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் ஒன்றை இளைஞர் ஒருவர் கடந்துவருகிறார். சிறிது தூரம் சென்றுவிட அவர் மீண்டும் திரும்பி வந்து அங்கிருக்கும் பெரிய கல் ஒன்றை எடுத்து அந்த காரின் கண்ணாடி மீது வீசுகிறார். அவர் வீசிய வேகத்தில் அந்த கல் கார் கண்ணாடியில் பட்டு அதே வேகத்தில் அந்த இளைஞரின் முகத்தை தாக்குகிறது.

வலியால் அலறியபடி அந்த இளைஞர் அங்கும் இங்கும் ஓடும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சியை நபர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்விட்டுக்கு 8,900 லைக் செய்துள்ளதோடு, 2500 கும் மேலானோர் ரீ ட்விட் செய்துளன்னர்.