திடீர் கார் வெடிகுண்டு தாக்குதல்! பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்வு!

திடீர் கார் வெடிகுண்டு தாக்குதல்! பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்வு!


massive car bomb blast in somalia

சோமாலிய நாட்டின் தலைநகர் மொகடிசுவில் இன்று காலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள  வரித்துறை அலுவலகம்  மற்றும் பாதுகாப்பு  சோதனைச்சாவடி போன்ற இடத்தில் காரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த கார் தாக்குதலில் 90 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை  76 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

somalia

மேலும் இந்த கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் இதைப்போலவே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தூதர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தாக்குதல் நடத்தப்பட்டது, அந்த தாக்குதலை அல்-ஷபாப் ஜிகாதி பயங்கரவாத அமைப்பு நடத்தியதாக ஏற்றுகொந்தது. அந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.