உலகம் டெக்னாலஜி

நிலவுக்கு சுற்றுப்பயணம் செய்யப்போகும் அந்த முதல் அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?

Summary:

நிலவுக்கு சுற்றுப்பயணம் செய்யப்போகும் அந்த முதல் அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?

ராக்கெட் மூலம் நிலாவுக்கு பயணம் செய்யப்போகும் முதல் நபரை ஸ்பேஸ்X  நிறுவனம் அதிரதியாக அறிவித்துள்ளது.

வரும் 2023 ஆம் ஆண்டில் நிலவுச் சுற்றுலாப்பயணத் திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது .

இந்த திட்டத்தின் மூலம் முதன் முதலாக நிலவுக்கு சுற்றுப்பயணம் செல்லப் போகும் நபர் யார்? என்ற கேள்வி பலருக்கும் இருந்தது .இந்நிலையில்  நிலாவுக்கு பயணம் செய்யப்போகும் முதல் நபரை ஸ்பேஸ்X  நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

ஜப்பானின் ஆடை நிறுவனமான ஸோஸோவின் நிறுவனர் யுசாகு மேஸவா என்ற கோடீஸ்வரர் தான் நிலவுச் சுற்றுப்பயணம் செல்லவுள்ள முதல் பயணி ஆவார். லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் இதை அறிவித்தார்.


Advertisement