உலகம் Covid-19

இதனால கொரோனா தாக்காது..! கழிவறையின் இருக்கையை நாக்கால் நக்கிய நபர்.! ஒரே வாரத்தில் கொரோனாவால் பாதிப்பு.!

Summary:

Man who licks toilet to prove not affecting corono hot affected

கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களில் இருந்து கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவாது என்பதை நிரூபிக்கிறேன் என கூறி கழிவறை இருக்கையை நாவால் தொட்டு வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது.

வல்லரசு நாடுகளே கொரோனோவால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துவரும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தைச் சேர்ந்த 21 வயதான லார்ஸ் என்ற இளைஞர், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவாது என்பதை நிரூபிப்பதாக கூறி டிக் டாக்கில் பந்தயம் கட்டிள்ளார்.

இதற்காக, கொரோனா நோயாளி ஒருவர் பயன்படுத்திய கழிவறையின் கழிவறை இருக்கையை நாக்கால் தொட்டு அதை வீடியோ எடுத்து டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். இளைஞரின் இந்த மோசமான செயலுக்கு பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், இந்த வீடியோ பதிவிட்ட ஒரு வாரத்தில் தமக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சிகிச்சையில் இருக்கும் புகைப்படத்தை அந்த இளைஞர் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீண் பெருமைக்காக இளைஞர்கள் இதுபோன்ற மோசமான காரியங்களில் ஈடுபடவேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


Advertisement