உலகம்

டேய்.. இதை ஏண்டா கொண்டுவந்த.. ஏர்போர்ட்டில் இளைஞரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

பிரிட்டன் நாட்டில் அமைந்துள்ள விமான நிலையம் ஒன்றுக்கு சூட்கேசுடன் வந்த 19 வயது இளைஞரால் பெரும் பதற்றம் நிலவிய சம்பவம் தற்போது வைரலாகிவருகிறது.

பிரிட்டன் நாட்டில் அமைந்துள்ள விமான நிலையம் ஒன்றுக்கு சூட்கேசுடன் வந்த 19 வயது இளைஞரால் பெரும் பதற்றம் நிலவிய சம்பவம் தற்போது வைரலாகிவருகிறது.

பிரிட்டன் நாட்டின் மேற்கு லண்டனில் அமைந்துள்ளது ஹித்ரோ என்ற இடம். இந்த இட்டதில் விமான நிலையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹித்ரோவாவில் இருந்து இத்தாலி நாட்டிற்கு செல்வதற்காக கியோவிநசோ என்ற 19 வயது இளைஞர் ஒருவர் தனது லக்கேஜுடன் வந்துள்ளார்.

அப்போது விமான நிலையத்தில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த இளைஞரையும், அவர் கொண்டுவந்திருந்த சூட்கேசையும் சோதனை செய்தனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அந்த இளைஞர் கொண்டுவந்திருந்த சூட்கேசில் கை எறி குண்டு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதனால் ஒட்டுமொத்த விமான நிலையமும் பதட்டமடைந்தது. இதனை அடுத்து உடனே அந்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் பாம் நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த அவர்கள் இளைஞரின் சூட்கேசில் இருந்த கை எறி குண்டை சோதனை செய்துள்ளனர்.

அவர்கள் நடத்திய சோதனையில், அந்த இளைஞன் கொண்டு வந்த கை எறி குண்டு ஏற்கெனவே செயலிழக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அங்கிருந்த அனைவரும் சற்று நிம்மதியடைந்தனர். ஆனாலும் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விமான நிலையத்திற்கு கொண்டுவந்த குற்றத்திற்காக போலீசார் அந்த இளைஞருக்கு அபராதம் விதித்ததோடு, அவருக்கு 2 மாத சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த குண்டை அந்த இளைஞர் ஏன் தனது சூட்கேசில் வைத்து விமான நிலையத்திற்கு கொண்டுவந்த என்பது குறித்து என தகவலும் கிடைக்கவில்லை.


Advertisement