மனைவியை ஏமாற்றி காதலியுடன் இத்தாலிக்கு உல்லாசப் பயணம் சென்ற நபருக்கு கொரோனாMan lied wife and went with lover to italy got corono

இங்கிலாந்தில் மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு காதலியுடன் இத்தாலிக்கு சென்று வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சீனாவிற்கு அடுத்தப்படியாக தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பது இத்தாலியில் தான். இந்த கொடிய வைரஸ் இப்படி ஆட்டிப்படைக்கும் என்பது தெரியாமல் இங்கிலாந்து நபர் ஒருவர் தன் காதலியுடன் சில நாட்களுக்கு முன்பு இத்தாலிக்கு உல்லாசப் பயணம் சென்றுள்ளார்.

Coronovirus

அவர் தன் மனைவியிடம் தொழில் நிமித்தமாக இங்கிலாந்திலேயே வேறு ஊருக்கு செல்வதாக பொய் கூறியுள்ளார். இதனையடுத்து இத்தாலியில் இருந்து திரும்பிய அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மனைவி வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளார். தற்போது வரை கணவர் இத்தாலி சென்று வந்தது மனைவிக்கு தெரியவில்லையாம்.

பாதிக்கப்பட்ட அந்த நபர் தான் காதலியுடன் இத்தாலி சென்று வந்த தகவலை மருத்துவர்களிடம் மட்டுமே கூறியுள்ளார். மேலும் தன்னுடன் இத்தாலிக்கு வந்த பெண்ணை பற்றிய தகவலை கூற முடியாது என கூறியுள்ளார்.