உலகம்

கற்பை இழந்த ஒன்பது பெண்கள்! சாமி சொன்னதாக கூறி காவலித்தனம் செய்த மத போதகர்!

Summary:

Man abused 9 girls in koria in the name of god

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தியாவில் மட்டும் இல்லை. பெரும்பாலும் உலகநாடுகள் அனைத்திலும் இதுபோன்ற செயல்கள் நாளுக்குநாள் நடந்துகொண்டேதான் வருகிறது.

இதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால் கடவுளின் பெயரை சொல்லி காவலித்தனம் செய்கின்றனர் சிலபேர். அந்த வகையில் தென்கொரியாவில் மதபோதகர் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரிய மக்களிடம் மிகவும் பிரபலமான மத போதகர்களில் ஒருவர் ஜேராக் லீ. இவர் இதுவரை கடவுளின் பெயரை சொல்லி ஒன்பதுக்கு மேற்பட்ட பெண்களை கற்பழித்துள்ளார். இவனது கொடுமைகளை தாங்க முடியாத பெண் ஒருவர் இதுகுறித்து ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் முறையிட்டார்.

இதனையடுத்து ஜேராக் லீயை கைது செய்த போலீசார் அவனை விசாரிக்கையில் கடவுள்தான் தன்னை இவ்வாறு செய்ய சொன்னதாக விசாரணையில் கூறியுள்ளான். இறுதியாக இவனுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.


Advertisement