3 பச்சிளம் பிஞ்சுகள், தாய் - தந்தை என 5 பேர் சாலை விபத்தில் மரணம்..! malayali-family-5-persons-died-accident-at-saudi-arabia

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த தாய், தந்தை, 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கேரள மாநிலத்தை சார்ந்தவர்கள் பலரும் சவூதி அரேபியாவில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் அங்கு பெரும்பான்மையாக பணியாற்றி வருகிறார்கள். 

சவுதியில் உள்ள பிசா மாகாணத்தில், கேரளா கோழிக்கோடு போப்போர் பகுதியை சார்ந்த முகமது ஜபீர் (வயது 48) தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

சம்பவத்தன்று, ஜுபைல் என்ற இடத்தில் இருந்து, காரில் ஜிசான் நகருக்கு மனைவி சப்னா (வயது 36), குழந்தைகள் ஷைபா (வயது 7), சாகா (வயது 5), கைக்குழந்தை லைட்பி ஆகியோருடன் சென்றுகொண்டு இருந்துள்ளார்.

Keralites

காரில் இவர்கள் 5 பேர் பயணம் செய்த நிலையில், முன்னே சென்ற காரை இவர்களின் கார் முந்தி செல்ல முயற்சித்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே முகமது ஜாபீர், சப்னா மற்றும் 3 குழந்தைகள் என 5 பேரும் பரிதாபமாக பலியாகினர். 

இந்த விஷயம் தொடர்பாக ஜிசான் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முகமது ஜபீர் ஜிசான் நகருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், குடும்பத்துடன் அங்கு சென்ற போது விபத்து நடந்து மரணம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.