உலகம் காதல் – உறவுகள்

தனது வருங்கால மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, காதலன் செய்த பகீர் காரியம்!!

Summary:

lover attempt muder of future wife

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் அனஸ்தேசியா கோவலேவா. 22 வயது நிறைந்த இவர் விட்டலி சாய்க்கோவ்ஸ்கி என்ற இளைஞரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன்  இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தனது எனது காதலி அனஸ்தேசியா வேறு இளைஞருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவரிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டும் வந்துள்ளார். சமீபத்திலும் அவர்கள் இருவருக்கும் இது குறித்து வாக்குவாதம் எழுந்தது.

இந்நிலையில் கோபமடைந்த விட்டலி அவசர அவசரமாக கிளம்பி வெளியே சென்றுவிட்டார். விட்டலி கோபம் சரியாகிவிடும் என அனஸ்தேசியா எண்ணிக் கொண்டிருந்த நிலையில் வெளியே சென்று பெட்ரோல் வாங்கி வந்த விட்டலி அனஸ்தேசியா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். தீ மளமளவென பரவிய நிலையில் எரிச்சல் தாங்கள் முடியாமல்அனஸ்தேசியா கதறியுள்ளார்.

இந்நிலையில் இதனை கண்டு தாங்கிக்கொள்ள முடியாத விட்டலி தனது ஆடையை கழற்றி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் தீ வேகமாக பரவிய நிலையில் அவருக்கு பெரும் காயங்கள் ஏற்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து விரைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அனஸ்தேசியா.

ஆனால் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த விட்டலியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


Advertisement