உலகம் லைப் ஸ்டைல்

வானில் திடீரென தோன்றிய கருவளையம்..! ஏலியன் வருகையா? பறக்கும் தட்டா..? வைரலாகும் வீடியோ..!

Summary:

Lahore is shocked by black ring in the sky alien

பாகிஸ்தான் நாட்டின் வான் பகுதியில் திடீரென கருப்பு வளையம் ஒன்று தோன்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகர வான்பகுதியில் இந்த கருப்பு வளையம் திடீரென விண்ணில் தோன்றியுள்ளது. வழக்கத்துக்கு மாறாக தோற்றிய இந்த வளையத்தை அந்த பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

பலர் அந்த கருவளையத்தை வேற்று கிரக வாசிகளின் வருகை என்றும், பறக்கும் தட்டு என்றும் கூறிவருகின்றனர். ஆனால், இதுபோன்ற கருப்பு வளையங்கள் விண்ணில் தோன்றுவது புதிதல்ல என்றும், இதற்கு முன்னரும் இப்படி நடந்துள்ளதாக பல உதாரணங்கள் கூறப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு கஸஜஸ்தான் நாட்டில், 2014-ம் ஆண்டு இங்கிலாந்திலும், 2013-ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் புளோரிடா மற்றும் 2012-ம் ஆண்டு சிகாகோ ஆகிய இடங்களிலும் இதுபோன்ற கருப்பு வளையங்கள் விண்ணில் தோன்றியதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த கருப்பு வளையங்கள் உருவாக என்ன காரணம்? இதன் பின்னால் உள்ள விளக்கம் என்னவென்று முறையான அறிவியல் காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement