நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து! சென்னையில் பரபரப்பு!
இத்தாலியில் கொரோனாவால் மடியும் உயிர்கள்! நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 793 பேர் உயிரிழந்தனர். இதுதான் ஒரே நாளில் கொரோனா காரணமாக பதிவான அதிக உயிரிழப்பு.

இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவியதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இல்லாதது தான்.
ஆனால், இந்தியாவில் சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் தான் நம் நாட்டில் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க முடியும். மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்து, கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வோம். நாட்டிற்காக ஒத்துழைப்போம் தேசத்தின் மக்களை காப்பாற்றுவோம்.