சீன அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜி ஜின்பிங்குக்கு வாழ்த்து தெரிவித்த கைலாஸா அதிபர் நித்யானந்தா..! என்ன கூறினார் தெரியுமா?.!

சீன அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜி ஜின்பிங்குக்கு வாழ்த்து தெரிவித்த கைலாஸா அதிபர் நித்யானந்தா..! என்ன கூறினார் தெரியுமா?.!


kailasa-president-nithyananda-congrats-xi-jinping-selec

 

இந்தியா ரெட்கார்னர் நோட்டிஸ் பிறப்பித்த குற்றவாளியான நித்யானந்தா, சீன அதிபராக ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து 3வது முறையாக அந்நாட்டின் அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உலகத்தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக கருதப்படும் நித்யானந்தா, கைலாஸா என்ற நாட்டை உருவாக்கி அதனை உலகளவில் அங்கீகரிக்க வைக்கும் பணிகளை செய்து வருகிறார். 

Kailasa President

இந்த நிலையில், நித்தியானந்தா ட்விட்டர் பக்கத்தில் ஜி ஜின்பிங்கிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ட்விட் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், "ஐக்கிய மாகாணங்கள் கைலாசா மற்றும் இந்து மதத்தின் மேலிடத்தின் சார்பாக, தெய்வீக புனித பகவான் நித்யானந்த பரமசிவம், சீன மக்கள் குடியரசின் அதிபராக ஜி ஜின்பிங் ஜனாதிபதியாக வெற்றிகரமான பதவிக் காலத்திற்கான எங்கள் உண்மையான வாழ்த்துக்களை உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். 

Kailasa President

உங்கள் மகத்தான நாடு, அதன் மக்கள் மற்றும் கைலாசா இடையே நீண்டகால நட்புறவை எதிர்நோக்குகிறோம். பரமசிவனின் ஆசீர்வாதம் சீன மக்களுக்கு ஐஸ்வர்யம், பொருளாதார செழிப்பு, அமைதி, அன்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்" என கூறியுள்ளார்.