அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் FBI அதிகாரிகள் திடீர் ரெய்டு.. பதுக்கி வைக்கப்பட்ட ஆவணங்கள் பறிமுதல்.!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் FBI அதிகாரிகள் திடீர் ரெய்டு.. பதுக்கி வைக்கப்பட்ட ஆவணங்கள் பறிமுதல்.!



Joe Biden Wilmington House FBI Raid

 

அமெரிக்கா அதிபராக பதவி வகித்து வரும் ஜோ பைடன், முந்தைய காலத்தில் துணை அமெரிக்க அதிபராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரின் வீட்டில் சமீபத்தில் FBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அதவாது, அதிபர் ஜோ பைடன் தான் துணை அதிபராக பதவிவகித்து வந்த காலங்களில் அரசின் ரகசிய ஆவணங்களை பெற்ற நிலையில், அதனை மீண்டும் ஒப்படைக்காமல் பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்தது. 

Joe Biden

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையை தொடர்ந்து, 6 ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வில்மிங்டன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி வகித்தபோது கிடைத்த ரகசிய ஆவணங்களை ஒப்படைக்க தவறியதாக சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் பரிமுதல் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.