உலகம்

22 ஆவது மாடியில் இருந்து குதித்து பிரபல நடிகை, பாடகி தற்கொலை.. சோகத்தில் ரசிகர்கள்.!

Summary:

22 ஆவது மாடியில் இருந்து குதித்து பிரபல நடிகை, பாடகி தற்கொலை.. சோகத்தில் ரசிகர்கள்.!

ஜப்பானை சார்ந்த பிரபல நடிகை மற்றும் பாடகி சயகா காண்டா. இவர் ஜப்பான் நாட்டில் உள்ள வடக்குப்பகுதியில் அமைந்துள்ள சப்போரோ நகரின் உணவகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தங்கியிருந்தார். இந்நிலையில், விடுதியில் இவர் 22 ஆவது மாடியில் தங்கியிருந்த நடிகை, கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவருகிறது. 

22 ஆவது மாடியில் தங்கியிருந்த நடிகை, தற்கொலைக்கு பின்னர் 14 ஆவது மாடியில் பால்கனியில் இருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சயகா காண்டா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள உள்ளூர் காவல் துறையினர், நடிகையின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை மற்றும் பாடகி சயகா காண்டாவுக்கு 35 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement