கொரோனாவின் கொடூரம்.. சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த இத்தாலி!

கொரோனாவின் கொடூரம்.. சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த இத்தாலி!



iraly-beaten-china-in-corono-death-count

சீனாவில் துவங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது இத்தாலி.

கடந்த டிசம்பரில் பரவ துவங்கிய கொரோனா வைரஸ் இத்தாலியில் முதல்முதலாக ஜனவரி 31 ஆம் தேதி இரண்டு சீன சுற்றுலா பயணிகளிடம் கண்டறியப்பட்டது. பின்னர் சீனாவில் இருந்து இத்தாலிக்கு திரும்பிய நபர் ஒருவருக்கு பிப்ரவரி 21 ஆம் தேதி கண்டறியப்பட்டது.

Coronovirusபிப்ரவரி 22 ஆம் தேதி கூடுதலாக 60 பேருக்கும் முதல் இறப்பையும் இத்தாலி சந்தித்தது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவ துவங்கிய கொரோனா வைரஸால் தினமும் உயிர்கள் பலியாக துவங்கின. கடந்த 3 நாட்களில் மட்டும் தலா 400 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 41035 பேருக்கு பாதிப்பும் 3405 உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு சீனாவை விட குறைவாக இருந்தாலும் உயிரிழப்பு சீனாவை விட 160 அதிகமாக உள்ளது. சீனாவில் 80,928 பாதிப்பும் 3245 உயிரிழப்பும் பதிவாகியுள்ளன. உலகளவில் பாதிப்பு 240820 ஆகவும் பலி 9831 ஆகவும் உள்ளது.