அடக்கடவுளே..! ஒரு நொடியில உயிர் போச்சே... ஜிம்மில் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த இளம்பெண்! திறந்திருந்த 3-வது மாடி ஜன்னல்... ஓடிக்கொண்டிருக்கும் போதே தவறி விழுந்து பரிதாப பலி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!!



indonesia-gym-treadmill-window-fall-death

இந்தோனேசியாவின் போன்டியானாக் நகரில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த 22 வயது இளம்பெண், மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். முகத்தைத் துடைக்க முயன்றபோது நிலைதடுமாறி திறந்திருந்த ஜன்னல் வழியாக அவர் விழுந்தார் . பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகத்தைத் துடைக்க முயன்றபோது நேர்ந்த விபரீதம்

போன்டியானாக் நகரில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தின் மூன்றாவது மாடியில் அந்தப் பெண் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது முகத்தைத் துடைக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக சமநிலையை இழந்த அவர், அருகில் திறந்திருந்த ஜன்னல் வழியாகக் கீழே விழுந்தார்.

இதையும் படிங்க: பார்க்கும்போதே பக்குபக்குன்னு இருக்கே...! தண்ணீருக்குள் இருந்த முதலை திடீரென எகிறிய காட்சி..! ஒரு நொடியில் மிஸ் ஆகிட்டாரு... திகில் வீடியோ..!!!

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

டிரெட்மில் அருகே திறந்திருந்த ஜன்னல்

விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், டிரெட்மில்லுக்கும் ஜன்னலுக்கும் இடையே சுமார் 60 சென்டிமீட்டர் மட்டுமே இடைவெளி இருந்தது தெரியவந்துள்ளது. வெளிப்புறக் காட்சியை மறைக்கக் கூடாது என்பதற்காக டிரெட்மில் ஜன்னலை நோக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஜன்னலைத் திறக்கக் கூடாது என எச்சரிக்கும் ஸ்டிக்கரும் சேதமடைந்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சிக் கூடப் பணியாளர் ஓய்வில் இருந்த நேரத்தில் விபத்து நடந்துள்ளது.

உடற்பயிற்சிக் கூடம் மூடல்; உரிமையாளரிடம் விசாரணை

பெண்ணின் உயிரிழப்பைத் தொடர்ந்து அந்த உடற்பயிற்சிக் கூடம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியம் காட்டப்பட்டதா என்பது குறித்து அதன் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து, உடற்பயிற்சிக் கூடங்களில் இயந்திரங்களைப் பாதுகாப்பான இடைவெளியில் அமைப்பது, ஜன்னல்களுக்கு உரிய தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை ஏற்பாடுகளை உறுதி செய்வது ஆகியவற்றின் அவசியத்தை மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.