#Earthquake: இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. மக்கள் அதிர்ச்சி.!

#Earthquake: இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. மக்கள் அதிர்ச்சி.!


Indonesia Earthquake Today

சுலாவேசி, கோட்டாமோபகு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானது.

உலகளவில் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது இயல்பாகிவிட்டது. மனிதரின் செயல்பாடுகள் இயற்கையை பெருமளவு பாதித்து வருவதால், அது தன்னை பாதுகாத்துக்கொண்டு உலகை சமநிலைப்படுத்த அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஜப்பான், இந்தோனேஷியா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது உண்டு.

இந்நிலையில், இந்தோனேஷிய நாட்டில் உள்ள சுலாவேசி, கோட்டாமோபகு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 06:53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் கோட்டாமோபகு நகரின் வடக்கு வடகிழக்கு திசையில் 779 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது.