இந்தியா உலகம்

அமெரிக்காவில் 800 அடி ஆழத்தில் பிணமாக கிடந்த இந்திய தம்பதியினர்!

Summary:

indian couple dead in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யோசெமைட் தேசிய பூங்காவில் இந்திய தம்பதியினர் 800 அடி ஆழத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த விஷ்ணு விசாந்த் (29), மீனாட்சி மூர்த்தி (30) ஆகியோர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யோசெமைட் தேசிய பூங்காவில் உள்ள டாப்ட் பாய்ண்ட் என்னுமிடத்தில் பிணமாக கிடந்தனர். இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நியூயார்க் நகரில் வசித்து வந்த இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்பு சான் ஜோஸ் பகுதியில் குடியேறி உள்ளனர். விஷ்ணு விசாந்த் அங்கு இருக்கும் சிஸ்கோ நிறுவனத்தின் மென் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் உலகின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் 800 அடி ஆழத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது உறவினர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Inspiring life lessons learnt from my role model yet my partner-in-crimes and best friend, my dearest hubby in 7 years of love and 2 years of marriage. Click through to know how this always smiling, kind and forgiving man continues to inspire his mermaid-haired girl with quite a few valuable lessons in life at Holidays and HappilyEverAfters.com

இந்த சம்பவம் பற்றி பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கையில் இவர்கள் மரணத்திற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை இவர்கள் எப்படி இந்த ஆழமான பகுதியில் விழுந்து இருப்பார்கள் என்ற விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களுடைய முகநூல் பக்கத்தின் மூலம் கிடைத்த தகவலின் படி இவர்கள் இருவரும் கேரளாவிலுள்ள செங்கனூர் பொறியியல் கல்லூரியில் 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை பயின்று வந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.


Advertisement