ஏழாம் இடத்தில் இந்தியா... உலகின் பழமையான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது உலக மக்கள் தொகை ஆய்வு மையம்...!
ஏழாம் இடத்தில் இந்தியா... உலகின் பழமையான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது உலக மக்கள் தொகை ஆய்வு மையம்...!

உலகின் பழமையான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது உலக மக்கள் தொகை ஆய்வு மையம். கி.மு 2 ஆயிரத்தில் முதன் முதலாக இந்தியாவில் ஒரு அரசு உருவானதாக கூறப்படுகிறது.
உலகின் பழமையான நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தையும், இந்தியா 7ஆம் இடத்தை பிடித்துள்ளது என்று உலக மக்கள் தொகை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கி.மு 3 ஆயிரத்து 200இல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான சான்றுகள் உள்ளன.
எகிப்த்தில் கி.மு 3 ஆயிரத்து 100 ல் முதல் அரசு உருவான சான்றுகள் உள்ளன. இது இரண்டாவது இடத்தில் உள்ளது.
கி.மு 2 ஆயிரத்து 70 ல் சீனாவில் அரசுகள் உருவாகியுள்ளது. சீனா 6-ஆம் இடத்தில் உள்ளது.
கி.மு இரண்டாயிரத்தில் முதன் முதலாக இந்தியாவில் ஒரு அரசு உருவானதாக கூறப்படுகிறது.