BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
என் கூட படுக்கைக்கு வாங்க டீச்சர்.. டியூசன் போன இடத்தில் 15 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. கூண்டோடு கைது.!
ஸ்மார்ட்போன் மோகம் பல கொடுமைகளை நம் கண்முன் நிறுத்துகிறது, அதில் சிலவை மட்டுமே செய்தியாக வெளியாகிறது. குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கவனிக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை உணருங்கள்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியில் பெண் ஆசிரியை வசித்து வருகிறார். 26 வயதாகும் ஆசிரியை, கணித பாடம் பயிற்றுவித்து வருகிறார்.
இதையும் படிங்க: சாலையோரம் உட்கார்ந்து இருந்ததால் சோகம்; நண்பர்கள் மீது பாய்ந்த கார்.. ஒருவர் பலி., 2 உயிர் ஊசல்.!
இவர் கல்வியில் பின்தங்கி இருக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, வீட்டில் இலவசமாக டியூசனும் எடுத்து வந்துள்ளார். இதனிடையே, 15 வயதுடைய மாணவர் ஒருவர் டியூசன் பயின்று வந்துள்ளார்.
அவர் ஆசிரியை உடை மாற்றுவதை தனது ஸ்மார்ட்போனில் வீடியோ எடுத்து வைத்து, ஆசிரியரை தன்னுடன் படுக்கையை பகிருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
சிறார்கள் குழு கைது
இதனால் அதிர்ந்துபோன ஆசிரியை தவிக்கவே, வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பிய மாணவர், அதனை நண்பர்கள் உதவியுடன் இன்ஸ்டாகிராம், வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை அவமானத்தில் தற்கொலைக்கு முயலவே, மீட்கப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். அவரிடம் பெற்ற புகாரின் பேரில் சிறார்கள் குழுவை சேர்ந்த இந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பள்ளி ஆசிரியரை குடும்பத்துடன் சூறையாடிய கொடூர கும்பல்; நால்வர் கொடூர கொலை.. காரணம் என்ன?..!