உலகம் காதல் – உறவுகள்

காதலனுடன் உல்லாசமாக இருந்து விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்த காதலி: பின்பு காதலன் செய்த அதிர்ச்சி சம்பவம்!

Summary:

illlecal relationship

மங்களூர் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இளம்பெண் மாரடைப்பால் மரணமடைந்ததாக சொல்லப்பட்ட செய்தியில், அவரது காதலனே கழுத்தை நெரித்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மங்களூருவில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் அஞ்சனா என்ற  இளம் பெண்,  மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த கொலை குறித்து நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் அஞ்சனாவோடு தங்கியிருந்த காதலன் சந்தீப் தான் அந்த  கொலையை  செய்துள்ளார் என்பது தீர்மானமானது.

 சந்தீப்  தனது சொந்த ஊரான பெங்கோடகி தண்டா சென்றுவிட்டார் என தகவல் கிடைத்தது. அவரை சுற்றி வளைத்து விசாரித்தபோது, கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

ullasam lovers pic க்கான பட முடிவு

சமூக ஊடகத்தின் மூலமாக, இருவரும் பழக தொடங்கி, பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர் . சில மாதங்களுக்கு முன்பாக, வீட்டில் பொய் சொல்லிவிட்டு, இருவரும் மங்களூருவிற்கு ஓடிவந்து, அபார்ட்மெண்ட் ஒன்றில் வீடு பார்த்து வாடகைக்கு தங்கியுள்ளனர். வீட்டின் உரிமையாளரிடம் இருவரும் திருமணமானதாகவும், வேலை தேடி மங்களூரு வந்தோம் என்றும் பொய் சொல்லியுள்ளனர்.

சில நாள் ஒன்றாக தங்கியிருந்து விட்டு, பின்னர் திருமணம் செய்துகொள்ள இருவரும் தீர்மானித்திருக்கிறார்கள். இருவரும் சிறிது காலம் கணவன் மனைவி போல, உல்லாசமாக வாழ்ந்துள்ளனர். அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி விவாதித்தபோது, ​​அஞ்சனா தன் பெற்றோருக்கு அவளுக்கு பொருத்தமான மாப்பிள்ளையை பார்த்துள்ளதாகவும், அவனையே  திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியிருக்கிறார். இந்த விவாதம் போய்க் கொண்டிருக்கும்போதே டென்ஷானான சந்தீப், இவ்வளவு நாள் என்னோடு உல்லாசமாக வாழ்ந்துவிட்டு, இப்போது உனக்கு வேறொருவன் வேண்டுமா என  கேபிள் வயரால் அஞ்சனாவை கழுத்து நெரித்து கொலை செய்திருக்கிறார்.

illegal relationship க்கான பட முடிவு

பின்னர் அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார். மாலையில் வீட்டு உரிமையாளர் அறையில் அஞ்சனா இறந்ததைக் கண்டதும். போலீசில் புகார் அளித்தார்.  விரைந்து வந்த போலீஸ் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்த வீட்டின் உரிமையாளர், அஞ்சனாவின் காதலன் சந்தீப்பை  அடையாளம் காட்டியிருக்கிறார். கொலை செய்தபின், சந்தீப்  தனது சொந்த ஊரான சிங்காகிக்கு ஓடிவிட்டார். போலீஸ் சிறப்பு குழுக்கள், அமைத்து  சந்தீப்பை கைது செய்துள்ளனர். கைதான சந்தீப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 


Advertisement