தேனிலவுக்கு சென்ற கணவன்-மனைவி.! கழிவறையில் வைத்து கணவன் செய்த வெறிச்செயல்.!

தேனிலவுக்கு சென்ற கணவன்-மனைவி.! கழிவறையில் வைத்து கணவன் செய்த வெறிச்செயல்.!


husbans killed his wife

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்த கிரிஸ்டினா என்ற பெண் கடந்த பிப்ரவரி மாதம் பிரட்லி ராபர்ட் டாசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தேனிலவுக்காக கிரிஸ்டினா தனது கணவர் பிரட்லியுடன் கடந்த 7-ம் தேதி பிஜி நாட்டில் உள்ள ஒரு தீவுக்கு சென்றுள்ளனர்.

அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருவரும் தங்கியுள்ளனர். இந்த நிலையில், ஓட்டலில் இந்த தம்பதியினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரட்லி தனது மனைவி கிரிஸ்டினாவை கழிவறையில் வைத்து அடித்துக்கொலை செய்துவிட்டு அந்த தீவில் இருந்து படகும் மூலம் தப்பிச்சென்றுள்ளார்.

மறுதினம் ஓட்டல் பணியாளர் உள்ளே சென்று பார்த்தபோது கிரிஸ்டினா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்த படகு மூலம் தீவு விட்டு தீவு தப்பிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.