பேய் தான் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக நினைத்த பெண்.! கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி.!House owner arrest for sexual harassment

 

 

 

சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதி கடந்த ஆண்டு மே மாதம், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் குடியேறினார். புதிதாகக் குடிவந்தவர்களிடம் சமூக ரீதியான நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டின் உரிமையாளர் இவர்களுக்கு ஜூன் மாதத்தில் மது விருந்து கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மது போதையில் கணவன் மனைவி இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர். அவர்கள் தூங்கிகொண்டிருக்கும்போது, ஒரு உருவம் தன்னை கட்டிப்பிடித்து, முத்தமிடுவதைப் போல அப்பெண் உணர்ந்தார். பின்னர் கண் விழித்தபோது தன்னை நெருங்கி வந்தது தன்னுடைய கணவராக இருக்கலாம் என்று அவரே ஆறுதல் சொல்லிக் கொண்டார்.

ஆனால், இருட்டில் வந்த உருவத்திற்குத் தலையில் முடி இருந்தது, தன்னுடைய கணவருக்கோ வழுக்கைத் தலை, இதனால் அப்பெண்ணிற்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏதோ பேய் தான் தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறது என்று அந்தப் பெண் நினைத்துக் கொண்டார். ஆனாலும் இனிமேல் இவ்வாறு நடந்தால் அதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படுக்கை அறையில் ரகசிய கேமரா ஒன்றை வைத்துள்ளார்.

இந்தநிலையில், ஆகஸ்ட் மாதம் வீட்டின் உரிமையாளர் மீண்டும் மது விருந்து கொடுத்துள்ளார். அன்றைய தினமும் போதையில் அந்த பெண்ணும், அவரது கணவரும் தூங்கச் சென்றுவிட்டனர். அந்த நாளும் அதேபோன்ற பாலியல் சீண்டல் நடைபெற்றது. இதையடுத்து, காலையில் சிசிடிவி கேமராவை எடுத்து பார்த்தபோது அந்த தம்பதிக்கு ஜோடியினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் உரிமையாளர் தான் இத்தனை நாளும் இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்த நிலையில் அவர்கள் வீட்டின் உரிமையாளர் மீது புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.