பூனையை காப்பாற்ற 5 வது மாடியில் இருந்து 7 வயது சிறுவனை கயிறு கட்டி கீழே இறக்கிய பாட்டி..! திகில் வீடியோ..!
பூனையை காப்பாற்ற 5 வது மாடியில் இருந்து 7 வயது சிறுவனை கயிறு கட்டி கீழே இறக்கிய பாட்டி..! திகில் வீடியோ..!

பூனையை காப்பாற்றுவதற்காக பாட்டி ஒருவர் 5 வது மாடியில் இருந்து 4 வது மாடிக்கு தனது 7 வயது பேரனை கயிற்றை கட்டி இறக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பென்கான் என்னும் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. டாங் என்ற பெயர்கொண்ட அந்த பாட்டி 5 வது மாடியில் பூனை ஓன்று கஷ்டப்படுவதை பார்த்து அதை காப்பாற்றுவதற்காக தனது 7 வயது பேரனை கயிற்றை கட்டி கீழே இறக்கியுள்ளார்.
அந்த சிறுவனும் எந்த பயமும் இன்றி கீழே இறங்கி பூனையை காப்பாற்றிவிட்டு மீண்டும் கயிறின் மூலம் மேலே செல்கிறான். சிறுவன் கீழே விழுந்திவிடுவான், வேண்டாம் என கீழிருந்தவர்கள் சத்தம் போட, அதை கண்டுகொள்ளாமல் அந்த பாட்டி சிறுவனை கீழே இறக்கியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக அந்த சிறுவனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், சிறுவன் தப்பி தவறி கீழே விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என பலரும் அந்த பாட்டியை திட்டி வருகின்றனர்.