வாவ்.. தூக்கமா? ஐஸ்க்ரீமா? இந்த குட்டி ஏஞ்சல் படும் அவஸ்தையை பார்த்தீங்களா! ரசிக்கவைக்கும் கியூட் வீடியோ!!girl-kid-eating-icecream-video-viral

குழந்தைகள் என்றாலே அழகுதான். அவை இருக்கும் இடத்தில் சந்தோஷத்திற்கு, சிரிப்பிற்கும் பஞ்சம் இருக்காது. குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் பெருமளவில் நெஞ்சை கவர்ந்து மெய் மறந்து ரசிக்க வைக்கும். கவலைகளை மறக்கச் செய்யும் சிறந்த மருந்தாக குழந்தைகளின் சிரிப்பே இருக்கும்.

இந்நிலையில் கடந்த சில காலங்களாகவே குழந்தைகளின் கியூட்டான சேட்டைகள், ஆச்சரியப்பட வைக்கும் திறமைகள் குறித்த வீடியோக்கள் இணையங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது குட்டி குழந்தை ஒன்று தூங்கி கொண்டே ஐஸ்க்ரீம் சாப்பிடும் பழைய கியூட்டான வீடியோ ஒன்று தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்  குழந்தை ஒன்றிற்கு ஐஸ்கிரீம் சாப்பிடும்போது பயங்கரமாக தூக்கம் வந்துள்ளது. ஐஸ்கிரீமை கெட்டியாக பிடித்துக்கொண்ட அந்த சிறுமி தூக்கத்தை கட்டுப்படுத்தி அதனை சாப்பிடுகிறது. ஆனாலும் அவ்வபோது தூங்கி விழுவது போலவே செல்கிறது. ஐஸ்கிரீமை விட மனசில்லாமல் தூக்கத்திலும் போராடி அதனை கியூட்டாக சாப்பிடும் குட்டித் தேவதையின் வீடியோ இணையத்தில் பரவி லைக்ஸ்களை குவித்து வருகிறது.