உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இறந்துவிட்டதாக கூறப்பட்ட பெண்..! அடுத்த 6 மணி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி..! திகில் சம்பவம்.!

Summary:

Girl got alive after 6 hours of death

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் மாரடைப்பால் இறந்து 6 மணிநேரம் கழித்து பின்னர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆட்ரே மாஷ் என்ற 34 வயது பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அவரது கணவர் அந்த பெண்ணை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகக் கருதப்பட்ட அப்பெண் 6 மணி நேரத்துக்குப் பின்னர் மீண்டும் உயிர் பிழைத்தார். இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், ஒருவர் 6 மணி நேரம் இதய துடிப்பு இல்லாமல் இருந்துவிட்டு பின்னர் உயிர் பிழைத்த அதிசயம் உலக நாடுகளில் இதுவரை நடந்துள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், ஸ்பெயின் நாட்டில் இதுவே முதல் முறை என கூறினார்.

மேலும், மனிதர்களின் உடலில் இருக்கும் சாதாரண வெப்ப நிலை நீடித்திருந்தால் நிச்சயம் அந்த பெண் இறந்திருப்பார். ஆனால், வெப்பநிலை மிக குறைவாக இருந்ததால் இந்த பாதிப்பு அவரது மூளையை தாக்கவில்லை. இதனால்தான் அவர் உயிர் பிழைத்துள்ளார் என்றார்.

மேலும், அந்த பெண் அதிக குளிர் நிறைந்த பகுதியில் இருந்ததால்தான் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதே குளிர்தான் அவரது உடல் வெப்பநிலையை குறைத்து அவரை உயிர் பிழைக்க வைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.


Advertisement