உலகம்

அடக்கொடுமையே! பெற்ற பிள்ளையையே யாராவது இப்படி மறப்பாங்களா?

Summary:

Girl forgot her baby and flighted

சவுதி அரேபியா, ஜெதா கிங் அபுதுலாசிஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் சென்ற பெண் பயனி ஒருவர் தான் பெற்ற கைக்குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டு விட்டு  விமானத்தில் பயணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு பெண், பிறந்து சில நாட்களேயான தனது கைக்குழந்தையுடன் கோலாலம்பூர் செல்வதற்காக, ஜெதா கிங் அபுதுலாசிஸ் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பொதுவாக பயணிகள் தங்கள் உடைமைகளில் எதாவது ஒன்றை மறந்து விட்டுச செல்வது வழக்கமான ஒன்று தான். 

ஆனால் இந்த பெண் பயனி தனது கைக் குழந்தையையே விமான நிலையத்தின் காத்திருப்போர் அறையில் விட்டுவிட்டு விமானத்தில் ஏறியுள்ளார். அவர் பயணம் செய்த சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தன் குழந்தையைப் பற்றிய ஞாபகம் அந்த பெண்ணிற்கு வந்துள்ளது. 

அவர் உடனடியாக விமானியிடம் இதைப் பற்றி கூறியுள்ளார். பொதுவாக பயணிகள் உடைமையை விட்டுச் சென்றால் விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படுவதில்லை. ஆனால், இந்த விசித்திரமான செயலுக்கு அப்படி செய்ய முடியாதல்லவா! 

எனவே, அந்த விமானி உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் விமானத்தை மீண்டும் தரையிரக்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுத்தனர். எனவே விமானம் மீண்டும் ஜெதா விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

பிறகு இறங்கி வந்த அந்த பெண் பயணி தனது குழந்தையை விமான நிலையத்தில் இருந்து மீட்டார். மீண்டும் அதே விமானத்தில் மகிழ்ச்சியுடன் அவர் பயணம் செய்தார். பெற்ற குழந்தையையே மறந்த தாயை நினைத்து பலர் வியப்பில் ஆழ்ந்தனர். 


Advertisement