நாய் வாய்க்குள் சிக்கிய முகம்..! 17 வயது பெண்ணிற்கு முகத்தில் 40 தையல் போட்ட மருத்துவர்கள்..! நாய் செய்த கொடூர செயல்..!

Girl attacked by dog while taking photo


Girl attacked by dog while taking photo

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 17 வயதான லாரா சான்சன் என்ற இளம் பெண் தனது நண்பர் ஒருவர் வளர்க்கும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த நாய் ஒன்றுடன் முகத்துடன் முகம் வைத்து புகைப்படம் எடுக்க முயன்றபோது, அந்த நாய் கொடூரமாக கடிதத்தில் அவரது முகத்தில் 40 தையல் போடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட நாயுடன் புகைப்படம் எடுக்க முயன்ற லாரா ஒரு கட்டத்தில் அதன் முகத்தோடு முகம் வைத்து புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார், அப்பொழுது கோபம் அடைந்த நாய் லாராவை கடித்து குதறிவுள்ளது. உடனே லாராவை நாயிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் லாராவின் முகத்தில் 40 தையல் போடப்பட்டுள்ளது.

இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில், லாரா நாய்க்கு மிகுந்த கோவம் வரும் செயலை செய்திருப்பார். அதனால்தான் நாய் அவரை கொடூரமாக தாக்கியுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும், நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், நாய் தன்னை கடிக்கும் புகைப்படங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லாரா.