உலகம்

ஒரே தண்டவாளத்தில் 2 இரயில்கள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 42 பேருக்கு நேர்ந்த துயரம்.!

Summary:

ஒரே தண்டவாளத்தில் 2 இரயில்கள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 42 பேருக்கு நேர்ந்த துயரம்.!

இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 40 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

ஜெர்மனி நாட்டில் உள்ள மத்திய மாகாணம் பவேரியா. இம்மாகாணத்தில் உள்ள முனிச் நகரில் இருந்து பயணிகள் இரயில் 100 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. 

இந்த இரயில் எபென்ஹவுஸ்ன் - ஷ்லோபடலாரன் இரயில் நிலையத்திற்கு இடையே சென்றுகொண்டு இருக்கும்போது, அவ்வழியாக அதே தண்டவாளத்தில் எதிர்திசையில் மற்றொரு பயணிகள் இரயில் வந்துள்ளது. 

இந்த இரண்டு இரயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில், இவ்விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 40 பயணிகள் படுகாயம் அடைந்து உயிருக்கு அலறித்துடித்துள்ளனர். 

விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.


Advertisement