நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமான பணிப்பெண் செய்த காரியம்! அதிர்ச்சியான பயணி!

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமான பணிப்பெண் செய்த காரியம்! அதிர்ச்சியான பயணி!



Funny air hostess was laying on flight

சவுத் வெஸ்ட் என்ற விமான நிறுவனத்தின் விமானம் ஓன்று அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நேஷ்வில்லேவில் இருந்து பிலடெல்பியாவுக்கு சவுத்வெஸ்ட் புறப்பட்டு சென்றது. குறித்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பயணி ஒருவர் தனது சூட்கேஸை வைப்பதற்காக லக்கேஜ் வைக்கும் பகுதியை துறந்துள்ளார்.

அங்கு விமான பணிப்பெண் ஒருவர் படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பணிப்பெண்ணை அவர் கீழே இறங்க கூறியுள்ளார். ஆனால், அந்த பணிப்பெண் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வேடிக்கை, சிரிப்பு காட்டுவதற்காகத்தான் தான் இங்கே படுத்திருப்பதாக கூறியுள்ளார்.

Mystery

இதில் சமரசம் ஆகாத அந்த பயணி ஊழியர்களிடன் சண்டை போட்டுள்ளார். சுமார் 10 நிமிடம் கழித்து அந்த பெண் கீழே இறங்கியுள்ளார். இருப்பினும், இதனால் கடுப்பான அந்த பயணி விமானம் தரை இறங்கியதும் இதுகுறித்து சவுத் வெஸ்ட் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனம் எங்கள் பணிக்குழுவினர் அவ்வப்போது இதுபோன்ற வேடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம் தான். அதே சமயம், பயணிகளின் பாதுகாப்பில் நாங்கள் எவ்வித சமரசமும் செய்வதில்லை என தெரிவித்துள்ளது.