தமிழர்களை கொன்று குவித்த, முன்னாள் இலங்கை கடற்படை தளபதிக்கு அரசு கொடுத்த உயரிய பதவி என்ன தெரியுமா?..!

தமிழர்களை கொன்று குவித்த, முன்னாள் இலங்கை கடற்படை தளபதிக்கு அரசு கொடுத்த உயரிய பதவி என்ன தெரியுமா?..!


Former SriLanka Navy Chief Wasantha Karannagoda Selected as State Governor in Lanka

இலங்கை நாட்டில் உள்ள மாகாணத்திற்கு, இலங்கை முன்னாள் கடற்படை தளபதி வசந்த் கரன்னகொடா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணக்கார குடும்பத்தை சார்ந்த குழந்தைகளை கடத்தி சென்று மிரட்டி பணம் பறித்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 14 பேரில், வசந்த் கரன்னகெடாவும் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2009 ஆம் வருடத்தில் இலங்கையில் முடிவடைந்த 34 வருட போரில், சட்டவிரோதமாக நடந்த கொலை குற்றச்சாட்டும் அவரின் மீது உள்ளது. இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர் போராட்டத்தின் போது, பல தமிழர்களை கொலை செய்ததாகவும் மனித உரிமை ஆணையம் குற்றசாட்டுகளை முன்வைத்தது. 

srilanka

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின் இறுதி சமயங்களில் தமிழர்களுக்கு எதிரான கடும் துஷ்பிரயோகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்த சமயத்தில் 40 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். கடந்த மாதத்தில் இவரின் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்ட நிலையில், வசந்த கரன்னகெடா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.