உலகம்

ஒரு மீனை ரூ13 கோடிக்கு ஏலம் எடுத்த நபர்! ஏலமெடுத்த மீனை என்ன செய்தார் தெரியுமா?

Summary:

fish high rate


ஜப்பான் நாட்டில் உள்ள டொயோசு என்ற பகுதியில் மீன் சந்தை ஒன்று இயங்கி வருகிறது. அங்குக் கடற்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் ஏலத்திற்குக் கொண்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த புத்தாண்டு அன்று ஒரு பெரிய அளவிலான மீன் ஒன்று விற்பனைக்கு வந்தது.

இந்த மீன் சுமார் 276 கிலோ எடை கொண்ட அரிய வகை டுனா ரக மீன் என்பதால் இதை வாங்குவதற்குக் கடுமையான போட்டியிருந்தது. பலர் போட்டிப்போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். இதையடுத்து கியோஷி கிமுரா என்பவர் இந்த மீனை ஏலத்தில் எடுத்தார்.

கியோஷி கிமுரா என்பவர் இந்த மீனை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ13 கோடிக்கு இந்த மீனை ஏலத்தில் எடுத்துள்ளார். அவர் அந்த மீனை தனது ரெஸ்டாரெண்டில் உணவிற்காகப் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்தார்.
 


Advertisement