அட.... இப்படியெல்லாம் நடக்குமா.! பிறந்தநாளில் கேக் வெட்டிய பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! பகீர் வீடியோ!!

அட.... இப்படியெல்லாம் நடக்குமா.! பிறந்தநாளில் கேக் வெட்டிய பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! பகீர் வீடியோ!!


fire-accident-for-birthday-women-video-viral

மகனுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது திடீரென தலைமுடியில் தீ பற்றி எரிந்த பதைபதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்தவர் அனா ஒஸ்டெர்ஹவுஸ். 34 வயது நிறைந்த அவர் தனது 7 வயது மகனுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த கொண்டாட்டத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.அந்த பிறந்தநாள் விழாவில் அறை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனாவின் பிறந்தநாள் கேக்கில் ஏராளமான மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேக் வெட்டுவதற்கு தயாரான அனா கேக்கில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை அணைக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது தீ அவரது தலைமுடியில் பற்றி மளமளவென எரியத் துவங்கியுள்ளது.

பின்னர் அங்கே இருந்தவர்கள் மிகவும் விரைவாக துரிதமாக செயல்பட்டு அனாவின் தலைமுடியில் பற்றிய தீயை அணைத்து அவரை காப்பாற்றியுள்ளனர். ஆனாலும் அவரது முடிகள் அனைத்தும் பொசுங்கியுள்ளது. மேலும் அவரது முகத்திலும் சிறிதளவு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.