உலகம்

கொரோனா வைரஸை தொடர்ந்து, வுஹான் நகரை நடுநடுங்கவைக்கும் திடீர் கரும்புகை! வெளியான அதிர்ச்சித் தகவல்!

Summary:

Fears thick smog over Wuhan may be China burning infected bodies

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போதுவரை  அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 426க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 22000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த கொடிய கொரோனா வைரஸால் பல நாடுகளும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. 

மேலும் இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் உயிரிழப்புகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திடீரென்று வுஹான் நகரம் முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் மேலும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். 
இந்நிலையில் கொரொனோ வைரசால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களை ரகசியமாக எரியூட்டுவதாக வுஹான் நகர மக்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கினர்.


 
அதனைத் தொடர்ந்து திடீரென ஏற்பட்ட கரும்புகை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், வுஹான் நகரில் நோய் பரவாமல் தடுப்பதற்காக சீனஅரசு கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல்களை பெரியளவில் இறுதி சடங்குகளை மேற்கொள்ளாமல்,  எளிமையாக உடனடியாக தகனம் செய்ய வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து வுஹான் நகரில் அமைந்துள்ள அனைத்து எரியூட்டும் இல்லங்களும் தொடர்ந்து 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.

 பொதுவாக நாள் ஒன்றிற்கு மூன்று சடலங்கள் வரை எரியூட்டும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் தற்போது 100 முதல் 300 சடலங்கள் வரை தகனம் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பொதுவாகவே எரியூட்டும் இல்லங்கள் அரைநாள் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக இரவு பகல் பாராமல் முழுநேரமும் செயல்பட்டு வருகின்றது இதனாலேயே வுஹான் நகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 


Advertisement