மகளை இரும்புக்கம்பியால் அடித்து, துடிதுடிக்க தந்தை செய்த கொடூரம்! வெளியான அதிரவைக்கும் பின்னணி!



father-killed-daughter-for-coming-late-in-iranp

தெற்கு மத்திய ஈரான், கெர்மன் பகுதியை சேர்ந்தவர் ரெய்ஹானா அமெரி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மிகுந்த கோபமடைந்த ரெய்ஹானாவின் தந்தை ஏன் இவ்வளவு தாமதம்? எங்கே சென்றாய் என சந்தேகமடைந்து அவரை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார். 

இதில் அவரது தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் ரெய்ஹானா சரிந்து மயங்கியுள்ளார். இந்நிலையில் அச்சமடைந்த அவரது தந்தை ரெய்ஹானாவை தூக்கி காரில் வைத்து மறைவான இடத்தில் போட்டுவிட்டு வந்துள்ளார்.

Crime

இந்நிலையில் மறுநாள் வீட்டிற்கு வந்த ரெய்ஹானாவின் சகோதரி மற்றும் தாய்க்கு வீட்டின் உள்ளே ரெய்ஹானாவின் ஆடை மற்றும் சுவர்களில் இரத்தம் இருப்பதைக் கண்டு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரெய்ஹானாவின் தந்தையின் காரில் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர் தனக்கு தெரியாது என மறுத்துள்ளார். 

பின்னர் போலீசார் தீவிர தேடுதலுக்கு பிறகு ரெய்ஹானாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்புதான் அவர் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் ரெய்ஹானாவின் தந்தையை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.