குழந்தை பிறந்த 2 வாரத்தில்.. உறவுக்கு அழைத்த கணவன்.. மறுத்த மனைவிக்கு வினோத பழிவாங்கல்.!

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு 21 வயது கணவருக்கு மனைவியும், ஒரு வயதில் ஒரு குழந்தையும், பிறந்து இரண்டு வாரங்களேயான ஒரு குழந்தையும் இருந்துள்ளது. அந்த நபர் போதை பழக்கத்திற்கு அடிமையானதுடன் மட்டுமல்லாமல் சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன் மனைவி குழந்தைகளை அவர் துன்புறுத்தி வந்துள்ளார்.
இறுதியாக அவரது மனைவிக்கு குழந்தை பிறந்து 2 வாரங்கள் தான் ஆகின்றது. ஆனால், அதற்குள்ளாக அந்த பெண்ணை உடலுறவுக்கு அழைத்து வற்புறுத்தி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கு அந்தப் பெண் சம்மதிக்கவில்லை. எனவே, தனது ஆசைக்கு இணங்காத மனைவியை பழிவாங்க நினைத்துள்ளார் அந்த கணவர்.
இரண்டு வார குழந்தை என்றும் பாராமல் அந்த பச்சிளம் குழந்தையை காட்டிற்குள் தூக்கிச் சென்று விட்டு அதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து மனைவிக்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்த மனைவி பயந்து போய் இது குறித்த தகவலை கிராம தலைவர் இடம் சென்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குச்சி ஐஸ் பிரியர்களுக்கு ஷாக் செய்தி.. ஐஸ்கிரீமில் உறைந்துபோன குட்டி பாம்பு..! நல்ல வேலை சாப்பிடல..
அவர் போலீசுக்கு தகவல் கொடுக்க போலீசார் விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டதுடன் கணவனை கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி கணவர் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தங்கத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைய போகிறதா.?! பொதுமக்கள் மகிழ்ச்சி.?!