சேலத்தில் நடந்த ஜாதிய விவகாரத்தை விசிக கண்டுகொள்ளாதது ஏன்?.. நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டு..!
கொரோனா உருவான உஹான் இறைச்சி சந்தையில் ரகசியமாக வாழ்ந்த குடும்பம்..! அவர்களை சோதனை செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி.!
கொரோனா உருவான உஹான் இறைச்சி சந்தையில் ரகசியமாக வாழ்ந்த குடும்பம்..! அவர்களை சோதனை செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி.!

சீனாவின் உஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படும் நிலையில், அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அந்த இடத்தை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனனர். ஆனால், ஒரே ஒரே ஒரு குடும்பம் மட்டும் அந்த இடத்தில் ரகசியமாக வாழ்ந்துவந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியதாக கூறப்படும் உஹான் சந்தை பகுதியை சீனா அரசு ஊழியர்கள் மிகுந்த பாதுகாப்புடன் சுத்தம் செய்தனர். அந்த பகுதியில் இருந்த அனைவரும் வெளியேறிய பின்னரும் ஒரு குடும்பத்தினர் மட்டும் வசித்துவருவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அந்த பகுதியில் தங்கியிருந்தது குறித்த காரணத்தை சொல்ல மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும், இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், வைரஸ் உருவானதாக கூறப்படும் அந்த பகுதியில் தங்கியிருந்த இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏதும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.