உலகம் லைப் ஸ்டைல்

பார்க்கும்போதே பயங்கரமா இருக்கு.. எரிமலை வெடிக்கும் திகில் காட்சி.. வைரலாகும் வீடியோ..

Summary:

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து சிதறும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து சிதறும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இத்தாலியில் உள்ள மலைத்தொடர்களில் மிகவும் பெரிய மலைத்தோர்களில் ஒன்று எட்னா மலைத்தொடர். தற்போது இந்த மலைத்தொடர் வெடித்து சிதறியுள்நிலையில், அதில் இருந்து வெளிவரும் தீக்குழம்பினால் அந்த பகுதியில் வானம் முழுவதும் செந்நிறத்தில் காட்சி அளிக்கிறது.

மேலும் சுமார் 10 ஆயிரத்து 926 அடி உயரம் உள்ள மலையில் எரிமலைகள் வெடித்து சிதறியதால் அதில் இருந்து அடிக்கடி தீக்குழம்பை கக்கி வருகின்றன. மேலும் எரிமலை வெடிப்பினால், அந்த பகுதியில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாம்பல் துகள்கள் பரவிவருகிறது.

மேலும் வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து லாவா குழம்பை கக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.


Advertisement