உலகம்

இங்கிலாந்து இளவரசரையே விட்டுவைக்காத கொரோனா வைரஸ்..! கொரோனா உறுதியானதால் மக்கள் அதிர்ச்சி.!

Summary:

England prince Charles corono test positive

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என்று எந்த பாகுபாடுமின்றி அணைத்து நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். மனித குலத்திற்க்கே பெரும் சவாலாக விளங்கும் இந்த வைரஸ் நோயால் இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர்.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியா போல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் பாதிப்பை சந்தித்துவருகிறது. இதில், இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுவருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் இளவரசர் சார்லஸ் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாமானிய மக்களை தாங்கிவரும் இந்த வைரஸ், இங்கிலாந்து நாட்டின் இளவரசரையே பாரபட்சமின்றி தாக்கியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement