1 இல்ல 2 இல்ல.. 54 காந்த குண்டுகளை விழுங்கிய சிறுவன்.. காரணம் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..

1 இல்ல 2 இல்ல.. 54 காந்த குண்டுகளை விழுங்கிய சிறுவன்.. காரணம் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..


England 12 years old boy ate 54 magnet balls

54 காந்த குண்டுகளை சிறுவன் ஒருவன் விழுங்கியதை அடுத்து மருத்துவர்கள் அவற்றை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள ப்ரீஸ்ட்விச் பகுதியை சேர்ந்தவர் 12 வயதான ரிலே மோரிசன். இவருக்கு அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்த பரிசோதனையில் ஈடுபடுவதில் மிகவும் ஆர்வமுடையவர். அந்த வகையில் ரிலே மோரிசன் சமீபத்தில் விபரீத பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள முயற்ச்சி செய்துள்ளார்.

அதன்படி, சிறிய அளவிலான காந்த குண்டுகளை விழுங்கிவிட்டு, அந்த காந்த குண்டுகள் மூலம் வெளியிலுள்ள காந்த ஈர்ப்பு பொருட்கள் தன் உடலில் ஒட்டுமா ஒட்டாதா என்று சோதனை செய்துள்ளார். மேலும், தனது வயிற்றுக்குள் இருக்கும் குண்டுகள் எப்படி வெளியே வரும் என்பதை பரிசோதித்து பார்க்க ஆர்வமாக இருந்துள்ளார்.

Mysterious event

இதனை அடுத்து அந்த சிறுவன் சுமார் 54 சிறிய அளவிலானா காந்த குண்டுகளை விழுங்கியுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் நினைத்த எதுவுமே நடக்கவில்லை. மேலும் காந்த குண்டுகளும் வெளியே வரவில்லை. இதனால் இரண்டு மூன்று நாட்கள் பசி இல்லாமல் கடும் வயிற்றுவலியை அவர் அனுபவித்துள்ளார்.

இதனால் பயந்துபோன அவர், தான் எதேச்சையாக காந்த குண்டுகளை விழுங்கிவிட்டதாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சிறுவனின் தாயார் சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதனை அடுத்து மருத்துவர்கள் சிறுவனை சோதனை செய்தபோது, உடலிலுள்ள முக்கிய உறுப்புகளை காந்த குண்டுகள் சேதப்படுத்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சுமார் 6 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் சிறுவனின் உடலில் இருந்த 54 காந்த குண்டுகளை வெளியே எடுத்துள்ளனர். தற்போது சிறுவன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.