3,500 வருட மம்மியை முப்பரிமாண முறையில் உருவாக்கிய ஆய்வாளர்கள்..!

3,500 வருட மம்மியை முப்பரிமாண முறையில் உருவாக்கிய ஆய்வாளர்கள்..!



Egypt 3500 Years Old Mummy Amenhotep I 3D Technology by Researchers

பண்டையகளால மக்களின் நாகரீகம், வாழ்க்கை முறை தொடர்பாக அறிந்து கொள்ளும் வரலாற்று ஆராய்ச்சிகள் உலகெங்கிலும் நடந்து வருகிறது. எகிப்தில் மம்மிகள் தொடர்பான ஆராய்ச்சி வருடக்கணக்கில் நடந்து வருகிறது. மம்மிகள் வாழ்ந்த காலகட்டம், அவர்களின் வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று பல விஷயங்கள் கண்டறியப்படுகின்றன. 

egypt

இந்நிலையில், எகிப்தில் அரசர் முதலாம் அமென்ஹோடெப்பின் மம்மி கடந்த 1881 ஆம் வருடம் கண்டறியப்பட்டது. இந்த மம்மி சுமார் 3,500 வருடத்திற்கு முந்தையது என ஆய்வுகளில் கண்டறியப்பட்ட நிலையில், இது தற்போது டிஜிட்டல் முறையில் முப்பரிமாண தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் முறையாக மம்மியை தொந்தரவு செய்யாமல் அது குறித்த ஆய்வு மேற்கொள்ள இவை உதவும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

egypt

முதலாம் அமென்ஹோடெப்பின் எகிப்திய நாகரீகம் கிமு 1504-1525 க்கு இடைப்பட்டது. இவர் 21 வருடம் அரசராக ஆட்சி செய்த நிலையில், அவர் தனது 35 வயதில் இறந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிகின்றனர். மேலும், முதலாம் அமென்ஹோடெப் அசல் கல்லறை கண்டறியப்படாத நிலையில், அவரின் மம்மி லக்ஸரில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.