மதுபோதையில் நண்பனின் ஆசனவாயில் ஓட்கா பாட்டிலை திணித்த தோழர்கள்.. வயிற்று வலியால் கதறியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!Drunken boys attacked his friend by vodka

நேபாள நாட்டைச்சேர்ந்த வாலிபரின் வயிற்றில் வோட்கா பாட்டில் இருந்த நிலையில், அதனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

நேபாளத்தில் உள்ள ரவுதஹத் மாவட்டம், குஜரா நகர் பகுதியை சார்ந்தவர் நூர்சாத் மன்சூரி. இவர் கடந்த சில நாட்களாகவே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஒரு கட்டத்தில் வலிபொறுக்க முடியாமல் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்துள்ளார்.

அப்போது அவரது வயிற்றில் ஓட்கா மதுபாட்டில் இருந்தது கண்டறியப்படவே, அதனை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னே இந்த அறுவைசிகிச்சை நடைபெற்ற நிலையில், 2:30 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்று பாட்டில் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. 

நேபாளம்

இதனால் குடலில் காயம் ஏற்பட்டு குடல் வீக்கத்துடன் காணப்பட்ட நிலையில், அந்த அபாய கட்டத்தில் இருந்து அவரை மருத்துவர்கள் மீட்டுள்ளனர். பின் காவல்துறையினர் தகவலறிந்து அவரிடம் விசாரணை நடத்தி அவரது நண்பர்கள் கைது செய்துள்ளனர். 

மேலும், நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்தியபோது போதையில் அவரது நண்பர்கள் ஆசனவாய் வழியே பாட்டிலை வயிற்றுக்குள் சொருகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.