லிப்டில் சிக்கி மேலே சென்ற நாய்! நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞர்! வைரல் வீடியோ!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் லிப்டிற்குள் ஏறுவதற்காக செல்கிறார். லிப்ட் தரை இறங்கியதும், அந்த பெண் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள தனது நாயுடன் லிப்டிற்குள் ஏறுகிறார். முதலில் அந்த பெண் லிப்டிற்குள் செல்ல, அவரது நாய் பாதியிலையே நின்றுவிடுகிறது.
நாய் சிறிய சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததால் லிப்டின் சென்சார் அந்த சங்கிலியை உணராமல் கதவை மூடிவிடுகிறது. இதில் நாய் கட்டபட்டிருந்த சங்கிலி லிப்டில் மாட்டி லிப்ட்டுடன் சேர்ந்து மேலே செல்கிறது.
இந்நிலையில் லிப்டில் இருந்து வெளியே வந்த நபர் ஒருவர் நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து உடனே அந்த நாய் கட்டப்பட்டிருந்த சங்கிலியை அவிழ்த்து அந்த நாயை காப்பாற்றுகிறார். இந்த காட்சிகள் அங்கிருந்த CCTV கேமிராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
விரைவாக செயல்பட்டு நாயை காப்பாற்றிய அந்த இளைஞருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
!!!! pic.twitter.com/OL5NL0ZBzb
— Johnny Mathis (@Johnnayyeee) December 10, 2019