உலகம்

நான் அப்படி செய்யவில்லை! மன உளைச்சலில் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு! மனைவிக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்!

Summary:

doctor commit suide for sex abuse complaint

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஸ்ரீதரன் சுரேஷ். 50 வயது நிறைந்த இவர் பிரித்தானிய அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் இளம்பெண் ஒருவருக்கு மயக்கமருந்து கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அப்பெண் தான் மயக்க நிலையில் இருந்தபோது மருத்துவர் சுரேஷ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அதனை ஸ்ரீதரன் சுரேஷ் முற்றிலும் மறுத்துள்ளார் மேலும் அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட மருந்தானது அவரது கற்பனை எண்ணங்களை உண்மை போலவே காட்டக்கூடியது. அவ்வாறு தான் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறுவதும் வெறும் கற்பனையே என கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விசாரணை தொடங்கிய நிலையில்  மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற அவரிடம்,  குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பணிக்கு திரும்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  மன உளைச்சல் அடைந்த அவர் நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் இறப்பதற்கு முன் தனது மனைவி விஷாலக்ஷ்மிக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் நான் எந்த தவறும் செய்யவில்லை.இந்த வழக்கு இப்படியே தொடர்ந்து கொண்டே போவதை நான் விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில் தனது வாழ்க்கை முழுவதையும் நோயாளிகளுக்காக அர்ப்பணித்த அவருக்கு ஆதரவாக யாருமே இல்லை,  அவருக்கு ஆதரவாக யாராவது பேசி இருந்தால் அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என கதறி அழுதுள்ளார்.


Advertisement