கண்ணில் டாட்டூ குத்த ஆசைப்பட்ட இளம்பெண்! கடைசியில் நிகழ்ந்த விபரீதம்!Dattu

ஐரோப்பாவை சேர்ந்த அலெக்சாண்ட்ரா என்ற இளம்பெண் ஒருவர் டாட்டூ வரைந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதற்காக இவர் தனது உடலில் பெரும்பாலான இடங்களில் டாட்டூ வரைந்துள்ளார்.

இதற்கிடையில் பிரபல பாப் பாடகர் பொபேக் அவர்கள் தனது கண்ணில் டாட்டூ குத்தியுள்ளார். இதனை பார்த்த அந்த இளம்பெண்ணுக்கும் தன்னுடைய கண்ணில் டாட்டூ குத்த வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. அதற்காக டாட்டூ குத்தும் நபர் ஒருவரை நாடியுள்ளார்.

Dattu

ஆனால் அவர் டாட்டூ குத்துவதில் அந்த அளவிற்கு கை தேர்ந்தவர் கிடையாது. இருப்பினும் காசுக்கு ஆசைப்பட்டு அந்த இளம்பெண்ணிற்கு கண்ணில் டாட்டூ குத்தியுள்ளார். அவர் டாட்டூ குத்திய சில மணி நேரத்திலேயே அந்த பெண்ணுக்கு கண்ணில் வலி ஏற்ப்பட்டுள்ளது.

உடனே அவர் மருத்துவரை அனுகியுள்ளார். அங்கு மருத்துவர்கள் டாட்டூ போட்டதால் அவருடைய வலது கண் முற்றிலும் பார்வை திறன் குறைந்து விட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அதனை அடுத்து அந்த இளம்பெண் டாட்டூ கலைஞர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.